தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின் படி ஆண்டுதோறும் மின் கட்டணத்தை 6 சதவீதம் மாநில அரசு உயர்த்த வேண்டும் என்பதாகும். அதன்படி இந்த கட்டண உயர்வு வருவதாக கூறப்படுகிறது ஆனாலும் தமிழக அரசு இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை