
அப்போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அட்டையா பட்டையா கழகம் சார்பில் பயிற்சியாளர் பி.சுரேஷ் தலைமையில் இளையவர் பிரிவில் சிறுமியர் குழு பங்கேற்று 3வது இடத்தை வென்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் கண்ணியப்பன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் ஆகியோர் கோப்பையை வழங்கி வாழ்த்தி தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் ஆர்கேபுரம் சிவா, லக்ஷ்மணன், சங்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.