போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அட்டையா பட்டையா கழகம் சார்பில் பயிற்சியாளர் பி.சுரேஷ் தலைமையில் இளையவர் பிரிவில் இரண்டு குழுக்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு சீருடைகள் உமாபதி அன் சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் வழங்கினார். இந்நிகழ்வில் விளையாட்டு வீரர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தும் வகையில் தி.முகவை சேர்ந்த .விஜய பாரதி, ச.ராஜா, பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப் தசரதன், மாறன், சென்னப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.