
குரோம்பேட்டை நியூ காலனி ஸ்ரீ வித்யா மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் மீனா கபிலன் தலைமையேற்று சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை மாதர் சங்கத் தலைவி திருமதி ரமா சம்பத் துணைத் தலைவி திருமதி மல்லிகா பாலகுரு செயலாளர்கள் சாந்தா கிருஷ்ணன் சுமதி ராமச்சந்திரன் பொருளாளர் சரோஜினி முத்துகிருஷ்ணன் அரங்க ஜோதி மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.