2025ம் ஆண்டில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை நிச்சயம் 200ஐக் கடந்துவிடும். நேற்றுடன் முடிந்த 8 மாதங்களில் இதுவரையில் 175 படங்கள் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. ஓடிடியில் ஒரே ஒரு படம் வெளிவந்துள்ளது.

8 மட்டுமே வெற்றி

இந்த 175 படங்களில் ‛‛மதகஜராஜா, குடும்பஸ்தன், டிராகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் பேமிலி, மாமன், தலைவன் தலைவி, கூலி” ஆகிய 8 படங்கள்தான் வசூல் ரீதியாக லாபகரமான வெற்றி படங்களாக அமைந்துள்ளன. மற்ற 167 படங்கள் தோல்விப் படங்கள் என்பது அதிர்ச்சிகரமான ஒரு தகவல். வெற்றி சதவீதம் என்பது 10 சதவீதம் கூட இல்லாதது வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்.