இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ (24.11.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம்‌, பட்டேல்‌ நகர்‌, சென்னை மேல்நிலைப்பள்ளியில்‌ மேல்நிலைக்‌ கல்வி பயிலும்‌ மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்‌. இந்நிகழ்ச்சியில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆர்‌.எஸ்‌.ராஜகண்ணப்பன்‌‌, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்துறை அமைச்சர்‌ பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர்‌ நலன்‌ மற்றும்‌ வெளிநாடுவாழ்‌ தமிழர்‌ நலத்துறை அமைச்சர்‌ செஞ்சி கே.எஸ்‌.மஸ்தான்‌‌, மேயர்‌ திருமதி ஆர்‌.பிரியா‌, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்‌ கலாநிதி வீராசாமி‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ ஜே.ஜே.எபினேசர்‌ (ஆர்‌.கே.நகர்‌)‌, ஆர்‌.டி.சேகர்‌ (பெரம்பூர்‌)‌, ஐட்ரீம்‌ ஆர்‌.மூர்த்தி (இராயபுரம்‌) ‌, துணை மேயர்‌ மு.மகேஷ்குமார்‌‌, கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌/ஆணையாளர்‌ டாக்டர்‌ ஜெ.ராதாகிருஷ்ணன்‌, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை செயலாளர்‌. ரீட்டா ஹரீஷ்‌ தக்கர்‌, மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.