தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் கொட்டும் மழையில் முள் புதரில் குட்டிகளுடன் தவித்த தெரு நாய்களை தனது ஆட்டோ, காரில் இடம் அளித்த ஆட்டோ ஓட்டுநர்

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஆதித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறார்.

இன்று மாலை வசித்துவரும் வீட்டின் அருகே முற்புதரில் நாய்கள் குரல்களால் முனகல் சத்தம் கேட்டது. பார்த்த தேவராஜின் குடும்பதினர் இரண்டு பெண் நாய்கள் முள் புதரில் குட்டிகளை சிலமணி நேரத்திற்கு முன் ஈன்று பாதுகாத்த நிலையில் கொட்டும் மழையில் தத்தளித்தது. தேவராஜின் மகன்கள் இருவர் மற்றும் அவரது மனைவி மழையில் நனைந்தபடி தாய் நாய்கள் மற்றும் குட்டிகளை உடனடியாக பிளாஸ்டிக் பாத்திரத்தில் மீட்டு மழையில் நனைந்து நடுநடுங்கிய குட்டிகளை ஈரத்தை துடைத்து வீட்டருகே வைத்தனர்.

அப்போது பணி முடித்து வீடுதிரும்பிய தேவராஜ் தனது ஆட்டோவில் ஒரு தாய்நாயும் அதன் குட்டியையும்.

அவரது காரின் டிக்கியில் மற்றொரு தாய் நாயுடன் குட்டிகளையும் விட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்படுதினார்.

இந்த காட்சிகளை அருகில் உள்ளவர்கள் செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் உயிரினங்களின் துன்பத்தை அறிந்த ஆட்டோ ஓட்டுனர் தேவராஜின் குடும்பத்தினரை பாராட்டி வருகிறார்கள்.

தேவராஜ்
(ஆட்டோ ஓட்டுநர்)