மதிமுகவில் இருந்து மல்லை சத்தியாவை நிரந்தரமாக நீக்கி பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மல்லை சத்யா கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மல்லை சத்யா மதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.