தாம்பரம் அடுத்த மப்பேட்டில் உள்ள சியோன் இண்டெர்நேஷனல் பள்ளியில் இன்று முதல் 4 நாட்கள் உலக தரவரிசை புள்ளிகளுக்கான சதுரக போட்டிகள் துவங்கியது.

இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அனைத்து வயதுடைய 530 சதுரங்க போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

முதல் நாள் போட்டியை பெண் கிரண்ட் மார்ஸ்டர் சவிதா ஸ்ரீ, சியோன் கல்வி குழு தலைவர் விஜயன் ஆகியோர் முதல் நகர்தலை நகர்த்தி போட்டியை துவக்கிவைத்தனர்.

ஒரு நாளுக்கு இரண்டு போட்டிகள் என நான்கு நாட்களில் 8 போட்டிகளில் பங்கேற்கும் சதுரங்க வீரர்கள் இறுதியில் தரவரிசையில் அவர்களுக்கான இடம் பிடிப்பார்கள். முக்கிய இடங்களை பிடிக்கும் வீரகளுக்கு கோப்பைகளுடன் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.