குரோம்பேட்டை ராதா நகர் ஹனுமார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராம சுப்ரமண்ய ஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம் 17.09.2023 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதை முன்னிட்டு நேற்று (04-.11.2023) மண்டலாபிஷேக நிறைவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாவர சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்ஆர்எஸ்எஸ் சபா நிர்வாகிகள் தலைவர் வி.கோதண்டபாணி, உப.தலைவர் பாவாயி பில்டர்ஸ் கே.மாரிமுத்து, செயலாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் துணை செயலாளர் கே.எஸ்.சௌமியநாராயணன், பொருளாளர் ஆர்.ஜே.முருகன், துணைப் பொருளாளர் ஜி.ரவிக்குமார், உறுப்பினர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே.எஸ்.சக்கரவர்த்தி, ஆர்.வெங்கடராஜீ, ஆர்.சுந்தரேசன், எஸ்.தேவநாதன் கலந்து கொண்டனர்.