நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய மந்திரி பியூஷ்கோயலை சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

2026 சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசித்தோம்.

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி

திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.