அரசு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு மக்களின் குறைகளை போக்க வேண்டும் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற ஊரக பகுதி மனுநிதி மூகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் கேளம்பாக்கத்தில் ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போர் விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியகுழு தலைவர் எல் இதயவர்மன், கேள்ம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த முகாமை பார்வையிட்ட குறு சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். அதிகமான மக்கள் பட்டா, உதவித் தொகை, மின்சார இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திரண்டு மனு அளித்து இருந்தனர்.

அப்போது பேசிய அவர் மக்கள் தற்போதுள்ள நடவடிக்கைபடி பட்டா இருந்தால் தான் மின் இனைப்பு பெறமுடியும். வீடு கட்ட முடியும் என்கிற நிலை உள்ளது எந்த ஒரு அரசிடம் அனுமதி கோரினாலும் அதற்கான உரிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். அதனால் மக்கள் அளிக்கும் தகுதியான மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் விரைந்து பட்டா உள்ளிட்ட ஆவனங்களை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக பேசிய திருப்பேரூர் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி:- தற்போது முதலமைச்சர் மக்களுக்கான திட்டங்களை தீட்டி ஆட்சி நடத்திவருகிறார். கணடாவை தொடர்ந்து லண்டன் போன்ற முன்னேறிய நாட்டு தொழிலாளர்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு காலை உணவு கூறி வெற்றி பெற்றுள்ளது.
மக்களின் முதல்வரின் முன்னோடி திட்டங்களுக்கு உலக அளவில் வரவேற்பு காணப்படுகிறது.

அதுபொல் ஆட்சியில் மனுகள் காகிதம் அல்ல முதல்வர் சுட்டிகாட்டிய வரிகள் படி அதிகாரிகள் மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் நியாமான தீர்வுகளை பூர்த்தி செய்திட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் ஆகியோர் அரசிடம் திட்டம் பெறவும், நிதி பெறவும் முடியும் மக்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பவர் அதிகாரிகள் தான் அவர்கள் பணி செய்தால் மக்களுக்கும் மக்களின் முதலர் ஆட்சிக்கும் நற்பெயர் அமையும் என உறுக்கமாக பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் 10 லட்சம் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களில் உதவிகள் வழங்கப்பட்டது.