
என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. இந்த தரவரிசை பட்டியலில் ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி தோசிதா லட்சுமி முதலிடம் பெற்றார். அவரது தந்தை நாகராஜன், சாப்ட்வேர் என்ஜினீயர், தாயார் ராதிகா, தோசிதா லட்சுமி, கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். அவர் பிரென்ச்- 100, ஆங்கிலம் – 98, கணிதம் – 100, இயற்பியல் -100, வேதியியல் 100, கணினி அறிவியல் 100 என 600-க்கு 598 மதிப்பெண் பெற்று இருந்தார். என்ஜினீயரிங் தர வரிசை பட்டியலில் அவர் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்றதால் அவருக்கு பெற்றோர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர். மாணவி தோசிதா லட்சுமி கூறும்போது, பி.இ. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் படிக்க உள்ளேன்” என்றார்.