சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதால் மணிமங்கலம் அருகே மாணவன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டான்

படப்பை ஆத்தனஞ்சேரியை சேர்ந்த மாணவன் தோனி வயது (12) எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சரியாக படிக்காமல் இருந்து வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் தோனி வீட்டிலிருந்து பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொளுத்திக் கொண்டான். அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டான்.

சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.