
பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என நாடார் சங்கங்கள் கோரிக்கை
பெருங்க்ளத்தூரில் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவி
பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் நாடார் பாதுகாப்பு பேரவை சார்பில் இன்று காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பள்ளி, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை காமராஜர் நற்பணி மன்ற தலைவர் பாலமுருகன் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன் கூறுகையில், பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என தொடர்ந்து நாடார் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்து வருகின்றோம். அந்த வகையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், காமராஜரின் இந்த 122 வது பிறந்தநாளில் பெருங்களத்தூர் புதிய மேம்பாலத்திற்கு காமராஜர் பாலம் என அறிவிப்பினை வெளியீட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.