
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கொத்தனார் பிச்சமுத்து (50) தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று வழக்கம் போல் மூன்றாவது தளத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது கால் தவறி முப்பது அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதனை கண்ட சக தொழிலாளர்கள் உடனடியாக பலத்த காயமடைந்த பிச்சமுத்துவை அவசர ஊர்தி மூலம் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உடலை கைப்பற்றிய பீர்க்கன்காரனை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர்.
போதிய பாதுகாப்பு இன்றி கட்டுமான பணியில் ஈடுபடுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக சக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.