தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் இரயில்வே கேட் அருகில் பிரகாஷ் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை மற்றும் நடத்தி வருவர் பிரகாஷ்.

இவர் வழக்கம் போல காலையில் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென கடைக்குள் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .

உடனே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது மஞ்சள் நிற சட்டை அணிந்த நபர் கையில் விளம்பர பேப்பர்களை வைத்துக்கொண்டு உரிமையாளரிடம் கோயிலுக்கு பணம் உதவி கேட்டுக் கொண்டிருக்கும் போது மேஜைரில் வைத்து இருந்த செல்போன் போனை திருடிய காட்சி பதிவாகி இருந்தது.

இதனையடுத்து சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் பீர்க்கன்காரனை காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்துள்ளார், போலீசார் விசாரனை செய்துவருகிறார்கள்.