செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உரிமையாளர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் சுக்குநூறாக நொறுக்கினர்.

முறையாக முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கவில்லை என வியாபாரிகள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

பெட்டிக்கடை கூட விட்டுவைக்காத மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் உள்ள திமுக பிரமுகரின் கட்சி அலுவலகத்தின் மீது கை வைக்காதது ஏன் எனவும் மக்கள் கேள்வி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜிஎஸ்டி சாலை மற்றும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பை குறைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.

குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை முக்கிய பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் பெயர் பலகைகள் போன்றவற்றை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

அதில் ஒரு பகுதியாக தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் பெயர் பலகைகள் அகற்றினார்.

குறிப்பாக கடையின் உரிமையாளர் கண் முன்னே கடைகளை ஜேசிபி என்று கொண்டு சுக்குநூறாக நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டம் அதிகம் சேரவே போலீசார் வர வைக்கப்பட்டு பாதுகாப்பாக கடைகளை அகற்றினர்.

மேலும் பெருங்குளத்தூர் ரயில்வே கேட் அருகே உள்ள திமுக கட்சி கவுன்சிலர் சேகரின் கட்சி அலுவலகம் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் எதிரே உள்ள கடைகளை அகற்றம் செய்த அதிகாரிகள் பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டினர்.