செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதில் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் உள்ள சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி சாதனா 597 மதிப்பெண்கள் பெற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்ஆங்கிலம் உயிரியல் வேதியல் இயற்பியல் கணிதம் ஆகிய ஐந்து பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் தமிழில் 97 மதிப்பெண்களும் பெற்று 597 மதிப்பெண்கள் பெற்று மாணவி சாதனா சாதனை படித்துள்ளார் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மாணவியாக அவர் தேர்வாகியுள்ளார்சாதனை படைத்த மாணவி சாதனாவை சீயோன் பள்ளி முதல்வர் டாக்டர் என் விஜயன் இனிப்பு வழங்கி பாராட்டினர்அன்றாடம் நடத்தும் பாடங்களை உடனுக்குடன் படித்து முயற்சியுடன் படித்தால் நிச்சயம் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம் என மாணவி சாதனா தெரிவித்தார்