
பிரதமர் மோடிக்கு முதல் ஆளாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினேன்.
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி ஒரு மகத்தான பணியைச் செய்து வருகிறார். ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்