
பச்சை பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவவும். பச்சை பாலை நன்கு பிசைந்த வாழைப்பழத்துடன் கலந்து கை, கால் முகத்தில் தடவினால் நல்லது. ஓட்ஸ் பொடி, தேன், வால்நட் பவுடர் ஆகியவற்றை பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் நல்லது. பால், தேன், வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் மசித்த வெள்ளரிக்காயுடன் கலந்து கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சேர்க்கலாம்.
பாலை உருளைக்கிழங்கு சாற்றுடன் கலந்து சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.