தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்ப்பவர் ராஜசிம்மன் தனக்கு கீழ் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்களை தொடர்ந்து ஆபாசமாக பேசி அவமரியாதை படுத்தி வருவதாகவும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும்,

தூய்மை பணியின் போது பாதுகாப்பு உபகரகரணங்களை கேட்டால் தகாத வார்த்தைகளில் பேசுவதாக கூறி அவர் மீது துறை ரீதியாக நடவடிக்க எடுக்க வலியுறுத்தி தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் தலைவர் ராஜசிம்மன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருநீர்மலை அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் அழகுமீனா உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். பின்பு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மற்றும் ஆணையர் அழகுமீனா யிடம் அளித்த புகாரின் பேரில் ராஜசிம்மன் பணி மாற்றம் செய்யபட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவித்தனர்.