சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பாலாஜி நகர் பகுதியில் வசித்து வந்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக விளையாட்டு பிரிவு துணைத் தலைவர் ஜெயராம் அவரது மனைவி அஸ்வினி, அவருடைய அலுவலக பணியாளர் பிரியா உள்ளிட்டோர்முதுகலை பட்டம் படித்த இளைஞர்களிடம் மத்திய அரசு துறைகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு மூலம் வேலைவாங்கி தருவதாக கூறி ரூபாய்.33 இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மத்திய அரசின் போலியான நியமண கடிதங்கள் மூலம் பட்டம் படித்த ஏராளமான இளைஞர்களை ஏமாற்றி விட்டு தலை மறைவு!*தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு பிரிவு துணைத்தலைவர் ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி சக்கரவர்த்தி, அலுவலர் பிரியா மற்றும் அஸ்வினியின் தாயார் சத்யா சக்கரவர்த்தி ஆகியோர்கள் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து கொண்டு தப்பி ஓட்டம்!பம்மல் சங்கர் நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷகிலா ஏமாற்றுதல் மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மேற்கண்ட குற்றவாளிகளை போலிசார் தேடிவருகின்றனர்.மேற்கண்ட குற்றச்சாட்டப்படும் நபர் ஜெயராம் M/S.Young Sports of India என்ற நிறுவனம் மூலம் தமிழ்நாட்டின் பட்டம் படித்து விளையாட்டு துறையில் முதன்மை வகித்த ஏராளமான இளைஞர்களை தமிழக மற்றும் டெல்லி பாஜகவின் அரசியல் தலைவர்கள் பெயரை சொல்லி ஏராளமான பணத்தை பெற்று வேலை வாங்கி தராமல் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.