பழவந்தாங்கலில் கண்ணாடி கடை உடைத்து திருடும் போது வயிற்றில் கண்ணாடி குத்தி ரத்தம் செட்ட செட்ட ரெயிலில் தப்ப முயன்ற கொள்ளையன் உயிரிழப்பு

சென்னை பழவந்தாங்கல் ரெயில்வே ஸ்டேசன் அருகில் ஸ்ரீவாரி வெல்த் சர்வீஸ் எனும் ஆன்லைன் டிரேடிங் கடை நடத்திவந்தவர் முரளிதரன்(49) பொழிச்சலூரை சேர்ந்த அவர் மகன் பள்ளிக்கு செல்ல கடையை கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு ஷட்டரை மூடாமல் சென்றார்.

இந்த நிலையில் மாலை 5 மணியளவில் மர்ம நபர் அந்த கடையில் இருந்து உடைந்த கண்ணாடி வழியே அவசரமாக வெளியேறியதை பக்கத்து கடைகாரர்கள் பார்த்த்துள்ளனர்.

ஆனால் சுமார் 20 வயதுடைய திருடன் கடையில் இருந்து வெளியே வரும்போது வயிற்றில் கண்ணாடி குத்தி ரத்தம் செட்ட செட்ட அருகில் உள்ள பழவந்தாங்கல் ரெயில் நிலைத்திற்கு சென்ற நிலையில் சென்னை நோக்கி சென்ற மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறியுள்ளான். அதனை பார்த்த பெண்பயணிகள் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் அந்த ரெயில் கிண்டி ரெயில் நிலையம் அடைந்த நிலையில் அங்கு இறங்க முயன்ற திருடன் மயங்கி கீழே விழுந்துள்ளான்.