பல்லாவரம் – துரைப்பாக்கம் மேம்பாலத்தில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மருத்துவ கல்லூரி மாணவர்கள்

நல்வாய்பாக ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர்.

சென்னை பல்லாவரம்-துரைப்பாக்கம் மேம்பாலத்தின் மீது ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மகாபலிபுரத்திலிருந்து சென்னை ஏர்போர்ட் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆதர்ஸ் ரெட்டி (20) அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்பொழுது பல்லாவரம் மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருக்கும் போது அதிவேகத்துடன் காரை வலதுபுறம் திரும்பியதால் கார் ஓட்டி வந்த நபரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைக் குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் மூன்று பெண் இரண்டு ஆண் உள்ளிட்ட மருத்துவ மாணவர்கள் வந்தனர்
இதில் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

இதனால் மேம்பாலத்தின் மீது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்வஇடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் கொடுக்கப்பட்டு விபத்தில் காயம் அடைந்த மூன்று மாணவிகள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய் போலீசார் குப்புற கவிழ்ந்து கிடந்த காரை கிரேன் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.