பல்லாவரம் மேம்பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது மினி வேன் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20) கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இன்று காலை வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக வீட்டில் இருந்து அதே கல்லூரியில் படிக்கும் நண்பர் கௌஷிக் உடன் தனது விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பல்லாவரம் மேம்பாலத்தில் முன்னாள் சென்றவாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே தாம்பரத்தில் இருந்து விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி வேன் மீது கட்டுபாட்டை இழந்து மோதியதில் தலையில் பலத்தகாயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கால் உடைந்த நிலையில் கிடைந்த கௌஷிக்கை மீட்ட விபத்தை நேரில் பார்த்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலிசார் ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மினி வேன் ஓட்டுனர் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த வினோத் (28) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.