தேவையான பொருட்கள்: 100 கிராம் -பன்னீர், 1 – வெங்காயம், 1 தக்காளி, 1 -பச்சைமிளகாய், 1/4 டீஸ்பூன் -இஞ்சி பூண்டு விழுது, 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/4 கசூரி மேத்தி, 1/4 டீஸ்பூன் – கரம் மசாலா, தேவையான அளவு -உப்பு, தேவையான அளவு -எண்ணெய் செய்முறை: பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கி தக்காளி சேர்த்துமசியும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கிசிறுதீயில் வைத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் வற்றி கிரேவி கெட்டியானதும் கசூரி மேத்தி, கரம் மசாலா, வறுத்த பனீர் சேர்த்து 2 நிமிடம் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.