பத்திரப் பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.*

மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டும்.

சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல் துறையில் புகாரளித்து ‘கண்டறியமுடியவில்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும். மேலும் உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதனையும் தாக்கல் செய்ய வேண்டும்.