
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடசோலை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று, 2 குட்டிகளை ஈன்றது. அவை கடந்த சில நாட்கள் தாய் ஆட்டிடம் இருந்து பாலை குடித்து வளர்ந்து வந்தன.
இந்த நிலையில், நாகராஜ் வீட்டில் வளர்க்கும் பசு மாட்டிடம் ஆட்டுக்குட்டுகள் பாலை குடிக்கத் தொடங்கின. அப்போது ஆட்டுக்குட்டிகள் பால் குடிப்பதை பசு மாடு தடுக்கவில்லை. எனவே, அவை தொடர்ந்து பசு மாட்டின் பாலை குடித்து பசிபோக்கி வளர்ந்து வருகின்றன