உடலில் சூடு அதிகரிப்பதால் வருகிற கண் எரிச்சல், வயிற்று எரிச்சல், குடல் பிரச்னைகள், சரும வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் பசு நெய்யைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து மேலே சொன்ன பிரச்னைகள் படிப்படியாகச் சரியாகும். உடலின் உள்ளே ஏற்படுகிற காயங்களை பசு நெய் விரைவில் குணமாக்கும்.பசு நெய் உடலினுள் இருக்கிற கழிவுகளை வெளியேற்றும். இதனால், புற்றுநோய் வருவது தடுக்கப்படும். இதிலிருக்கிற அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியைத் தரும்.பசு நெய்யின் சத்துகள் நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆர்த்ரைட்டிஸ் போன்ற தொற்றாநோய்கள் வருவதைத் தடுக்கும். நீரிழிவு பிரச்னையைக் கட்டுக்குள் வைக்கும். இந்த நோய்கள் இருந்து அவற்றுக்கான மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மருத்துவரிடம் கேட்டு அவர் ஆலோசனைப்படி பசு நெய் சாப்பிட்டால், இந்த நோய்களால் வருகிற பின்விளைவுகளைத் தடுக்கலாம். சிறுவயதிலிருந்தே பசு நெய்யை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு மூளை செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். அல்சைமர், பார்க்கின்சன்ஸ் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.வெள்ளையணுக்களை பலப்படுத்தும் ஆற்றல் பசுநெய்க்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதனால், புற்றுநோய்க்கான சிகிச்சையெடுத்துக் கொண்டிருப்பவர்கள், உடலில் சத்துப்பிடிப்பதற்காக பசு நெய் சாப்பிடலாம்.