
பிரதமர் மோடி தமிழகம் வந்த போது ஓபிஎஸ் அவரை சந்திக்க அனுமதி கேட்டார் அனுமதி கிடைக்கவில்லை இது பற்றி குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன் என்னிடம் கேட்டால் நான் அனுமதி வாங்கி தந்து இருப்பேன் என்று கூறினார். ஆனால் அவருக்கு 6 முறை எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும் அவர் பதில் அனுப்பவில்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரத்தை காட்டினார் இது பற்றி மீண்டும் நயினார் நாகேந்திரன் உடன் நிருபர்கள் கேட்டபோது அருகில் இருந்த அண்ணாமலை அவரை பேச விடாமல் அழைத்துச் சென்றார்