வரலாறு காணாத மழையால் பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில் விடுமுறைக்கு முன்பு சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்துள்ளனர். அதிகாரிகள் நாளை முதல் கண்காணிப்பு பணிகளை தொடங்கவும் உத்தரவு அளித்துள்ளது. இந்தநிலையில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமனம் செய்துள்ளனர். பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில் விடுமுறைக்கு முன்பு சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மின்சாரம், குடிநீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும் என்று அதற்கான அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. நியமனம் செய்த அதிகாரிகள் நாளை முதல் பள்ளி சீரமைப்பு பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
தென்மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி தொடங்கிய கனமழை தொடர்ந்து 15 மணி நேரம் கொட்டி தீர்த்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றங்கரையோர பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் கால்வாய்கள் வழியாக குளங்களுக்கும் சென்றதால், கால்வாய்கள், குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டன.
இதனால் இவ்விரு மாவட்டங்களிலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடந்தன. பல்வேறு இடங்களில் பாலங்கள் உடைந்ததால், கிராமங்கள் தீவுகளாக மாறின. நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வெள்ளநீர் வடிய தொடங்கிய நிலையில், நெல்லை மாவட்டம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது