இந்தூரில் நீட் தேர்வு நடைபெற்றபோது சில மையங்களில் மின்சார விநியோகம் தடைபட்ட நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மே 4-ந் தேதி, இடியுடன் கூடிய மழை பெய்ததால், தேர்வு மையத்தில் 2 மணி நேரம்வரை மின்தடை ஏற்பட்டதால், தன்னால் சரிவர தேர்வு எழுத முடியவில்லை என்றும், தான் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுபோத் அபயங்கர், அடுத்த விசாரணை தேதிவரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தார். தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு, மத்தியபிரதேச மேற்கு மண்டல மின்வினியோக நிறுவனம் ஆகியவை 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

ஜூன் 30-ந் தேதி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.