பிரபல சாமியார் நித்தியானந்தா வழக்குகள் தொடர்பாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார் பின்னர் கைலாச ” என்ற நாட்டை ஒரு தீவில் அமைத்ததாக செய்தி வெளியானது. அங்கிருந்து கொண்டு அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். இந்த நிலையில் மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது .மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை நடைபெறும் போது நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று நீதிபதி கேட்டதற்கு அவரது சிஷ்யை அர்ச்சனா என்பவர் ஆஜராகி விளக்கினார். ஆஸ்திரேலியாவில் கைலாச நாடு இருப்பதாகவும் .இதனை ஐநா சபை அங்கீகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்