
யு.ஏ.இ., கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, டெல்லி திரும்பினார்.
பிரதமர் மோடி, ஹரியானாவில் 9,750 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்டங்களை இன்று துவங்கி வைக்கிறார். இதற்காக அம்மாநிலத்திற்கு செல்லும் மோடி, ரவேரியில் 1650 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் குருகிராம் மெட்ரோ ரயில் திட்டம் (ரூ.5,450 கோடி) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.