தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பணிகளை தொடங்கியது. 76 அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
மாவட்ட செயலாளர்கள் அனைவரும் சென்னையில் தங்கி இருக்க தலைமைக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
இன்று மாலை மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.
இன்று மாலை முதல் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார்.

கூட்டணி கணக்கை நான் பார்த்துக்கொள்கிறேன் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.