
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறை நிர்வாகம் சுற்றுலா பயணிகளிடம் சுதந்திர தினத்தை பிரபலப்படுத் தும் வகையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொல்லியல் துறையின் பாரம்பரிய நினைவு சின்னங்களை தேசியக்கொடி நிறத்தில் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகளை பொருத்தி ஒளிருட்டப்பட்டி ருந்தது. அந்த வகையில் மாமல்லபுரம் வெண்ணை உருண் டைக்கல் தேசியக்கொடி நிறத்தில் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகளை பொருத்தி ஒளிருட்டப்பட்டி ருந்தது.
இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.