
திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகில் தியாக ராஜசுவாமி திருக்கோயில் பின்புறம் நந்தியோடைஎன்ற பகுதிகள் உள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரயில்வே இடத்தில் வீடு கட்டியிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களை காலி செய்து அவர்களுக்கு கும்மிடிபூண்டியில் மாற்று இடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மீதம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் சாலையின் குறுக்கே ரயில்வே தண்டவாளம் இடையில் போடப்படும் சிமென்ட் ஸ்லாப்புகள் இன்று காலை அங்கு அடுக்கப்பட்டு தெருவுக்கு உள்ளே போகும் நுழைவாயில் மறிக்கப்பட்டது.
இதை பார்த்த பொதுமக்கள் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது.
இந்தப் பகுதியில் உள்ளவர்கள் ரயில்வே ட்ராக் வழியை வரக்கூடாது.
அதனால் நாங்கள் அடைத்துள்ளோம் என்றார்கள்.
இதைக் கேட்ட பொதுமக்கள் திமுக மாமன்ற கவுன்சிலர் தனியரசை சந்தித்து தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை எடுத்துக் கூறினார். அவரும் அந்த இடத்தை வந்து பார்வையிட்டார்.
இதற்கிடையில் சாத்துமா நகர்மீன் மார்க்கெட் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த வாரம் அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை தடுத்து நிறுத்திய தலைவர் தனியரசு தற்போது எதுவும் செய்யாதீர்கள் என கேட்டுக் கொண்டதன்
பேரில் மாநகராட்சி அதிகாரிகள் திரும்பி சென்றனர்.