திருப்பரங்குன்றம் தீபத்தூண் பிரச்சனை காரணமாக மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது இதனால் நாங்களும் மலைக்கு செல்வோம் என்று எச் ராஜா தலைமையில் இந்து அமைப்புகள் முயற்சி செய்தன இதை அடுத்து தற்போது திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது கடுமையான சோதனைக்கு பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது