திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்த கவிஞர் சல்மா, திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதனால் திருச்சி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஓங்கி ஒலிக்கும் என்பதால் திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மாநகர ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி சிவா ,அருண் நேரு துரை வைகோ என 3 பேர் ஏற்கனவே எம்பி ஆக உள்ளனர்