
சென்னை அடுத்த தாம்பரம் விமான படை பயிற்சி மையத்தில் உள்ள விமானிகள் பயிற்றுநர் பள்ளியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரண்டு நாட்கள் அதன் நிறைவிழா கொண்டாடபட்டது. விமான படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுத்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இதில் 9000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து சாகசம், தேசிய கொடி மூவர்ண வடிவில் பாராசூட் இயக்குவது, பாராக்லிடிங், தாழ்வாக போர் விமானம் இயக்குவது, உள்ளிட்ட பல்வேறு வான் சாகசங்களை வீரர்கள் நிகழ்த்தி காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் விமான படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.