
ஓடை தெரு பகுதியில் மழைக்காலங்களில் கழிவு நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுவதாகவும் பல சிரமங்கள் தாங்கள் சந்திப்பதாகவும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பல்லாவரம் ரேடியல் சாலையில் சரவணா செல்வரத்தினம் அருகில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரகுபதி உதவி பொறியாளர் பழனி நகரமைப்பு ஆய்வாளர் சந்தோஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.