தாம்பரம் பேரூந்து நிலையத்தில் மின்னணு சுவர்திரை, அரசின் திட்டங்களை அறிந்துகொள்ள அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இயக்கி வைத்தனர்.

தாம்பரம் மாநகராட்சி ஜி.எஸ்.டி சாலை பேரூந்து நிலையத்தில் செய்தி-மக்கள் தொடர்த் துறை அரசின் செய்திகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்கள் அறிந்திடும் வகையில்
புதிய மின்னணு சுவர்திரை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இயக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மண்டலகுழு தலைவர்கள், டி.காமராஜ், ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி,மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது பேசிய செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்:-

அரசின் பல்வேறு செய்திகளை மக்களை சென்றடையவும், அதுபோல் அரசு செயல்படுத்தும் பல்வேறு திங்களின் நோக்கம், பயன் குறித்து மக்கள் அறிந்திடும் வகையில் இங்கு மின்னணு சுவர் திரை இயக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் கட்டமாக 10 மாநகராட்சிகளில் இதுபோல் மின்னணு சுவர்திரை அமைக்க திட்டமிட்ட நிலையில் 4 வது திரை இயக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மேலும் பல்வேறு இடங்களில் அமைத்து அரசின் செயல்பாடுகளை மக்களுக்கு தெரிவிக்கவும், திட்டகளும் அதற்கான தகுதிகளை விளக்கவும் இந்த தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளியாகும் அரசு என்னதான் பல்வேறு திட்டங்கள் அறிவித்தாலும் பொதுமக்களும் அதனை சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றார்.