சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு பெருங்களத்தூர்-பீர்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கம், கேளம்பாக்கம் செட்டி நாடு மருத்துவமனை மற்றும் சாய் ஆக்ஸ்ரா டிரெஸ்ட் இணைந்து, அனைத்து வித மருத்துவர்களை கொண்டு மாபெரும் பொது இலவச மருத்துவமனையை ஓய்வு பெற்ற நீதிஅரசர். வள்ளிநாயகம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்த இலவச மருத்துவமனையில் கண்,நெஞ்சகம்,பொது அறுவை சிகிச்சை,பொது மருத்துவம் மற்றும் குழந்தைகள் மருத்துவம் போன்றவற்றை இன்று முதல் , தினமும் காலை முதல் மாலை வரை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிடலப்பாக்கம் ச.ராஜேந்திரன்,முன்னாள் அதிமுக அமைச்சர் டி.கே.எம்.சின்னையா,மதிமுக மாவட்ட செயலாளர் மாவை.மகேந்திரன்,பாஜக செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேதாசுப்பிரமணியம் போன்ற அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு மருத்துவமனையை பார்வையிட்டனர்.

மேலும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.