தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் தலைமையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி ஆர்பாட்டம்

நல்லாட்சி வழங்கும் தமிழகமுதல்வர் மாணவர்கள், பெண்கள், தொழில்துறை மருத்துவ கட்டமைப்பு என முன்னோடி மாநிலமாக திகழ நடவடிக்கை எடுக்கும் சூழலில் ஏழைகள், இளைஞர் சீரழிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும். விஷச்சாராய வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நிக்கம் செய்ய கோஷங்கள் எழுப்பினார்கள்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரிக்கை விடுத்து தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது தலைமையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தின்போது மாண்புமிகு தமிழக அரசே மகளிர் வாழ்வை சீரழிக்கும் டாஸ்மார்க்கை இழுத்து மூடவேண்டும்.

கள்ளக்குறிச்சி விஷசாராயத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை கடுமையாக்கி பணி நீக்கம் செய்திடவேண்டும். பூரணமதுவிலக்கு அமல் படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பபட்டது. இந்த ஆர்பாட்டத்தில் மமக துணைப்பொது செயலாளர் எம்.யாக்கூப், குன்னகுடி அனிபா உள்ளிட்ட மமக மாநில நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது:- பல்வேறு அருமையான திட்டத்தை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். மாணவர்கள் படிக்க கல்வி உதவி, பெண்கள் முன்னேற்றம், தொழில்துறை முன்னேற்றம், மருத்துவ கட்டமைப்பு என பல முன்னேற்ற பாதையில் தமிழகம் செல்லும் நிலையில் சில அதிகாரிகள் கண்காணிக்க தவறியதால் கள்ளக்குறிச்சியில் சாதாரண அடித்தட்டு மக்கள் விஷசாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.

இதனை தடுக்க முழு மதுவிலக்கு அமல்படுத்திட வேண்டும் டாஸ்மாக் மது பழக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் அதிக போதைக்கு இதுபோல் கள்ளச்சாரயத்தை அருந்தி விஷதன்மையால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

தமிழக நல்லாட்சி நாயகர் இளைஞர், ஏழைகள் வாழ பூரண மதுவிலக்கு அமல் படுத்த கோரினார்.