தாம்பரத்தில் முடிச்சூர் பகுதி சக்தி நகரில் குடியிருப்பவர் கிருஷ்ணகுமார் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் வெளியூர் சென்று திரும்பி வந்த போது அவரது வீட்டின் பூட்டு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மட்டும் 50 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.
அவரது பக்கத்து வீட்டிலும் இதேபோல பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதன் உரிமையாளர்கள் இன்னும் வரவில்லை .இந்த சம்பவங்கள் குறித்து பீர்க்கங்கரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்