
இந்த மாத மத்தியில் தமிழகத்தில் மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. இது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வருகிற 10-ந் தேதிக்கு பிறகு மீண்டும் பருவமழை தீவிரமாகும். 15 ந்தேதியும் 17 – ந் தேதியும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்போது தென்மாவட்டங்களிலும் மற்ற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்றார்