கிழக்கு திசை காற்று தடைபட்டு தற்போது வறண்ட மேற்கு திசை காற்று வீசுகிறது மேலும் கடல் காற்று உள் நுழைவதும் தடை பட்டதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது.இன்று முதல் தமிழ்நாட்டின் வெப்பநிலை இயல்பை விட 4°©️ வரை உயரும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை முதல் குமரி வரை உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும்.

அடுத்த 5 நாட்களுக்கு சென்னை மதுரை திருச்சி நெல்லை விருதுநகர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாக வாய்ப்பு. நவம்பர் மாத வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வெப்பநிலை உயர இருப்பதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்.