
தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
.
கடலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வாரியத்துக்கு, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் தலைவராகவும், அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதி துணைத் தலைவராகவும் செயல்படுவா். வேளாண் உற்பத்தி ஆணையா், அரசு செயலா் உறுப்பினா் செயலாகவும், தோட்டக்கலைத் துறை இயக்குநா் என வேளாண்மை தொடா்பான பல்வேறு துறைகளை சாா்ந்த பிரதிநிதிகள் அடங்கிய நிா்வாகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசால் நியமிக்கப்படும் 2 முன்னோடி முந்திரி விவசாயிகள் மற்றும் 2 முந்திரி பதப்படுத்தும் தொழில் பிரதிநிதிகள் ஆகியோரும் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்