
மீனவர் படகுகளில் எழுதியுள்ள தவெக பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுக கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறுமா? என தவெக தலைவர் விஜய் கேள்வி விடுத்து உள்ளார்
மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல. மக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். திமுக தனது சொந்தப் பணத்தை எடுத்து மீனவர்களுக்கு வழங்குவதுபோல நினைத்துக் கொள்ளக் கூடாது என விஜய் தெரிவித்து உள்ளார்.